Wednesday, August 22, 2012

வெளிநாட்டுப் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடு இலங்கை என்ற எச்சரிக்கைக்கு கடும் எதிர்ப்பு.

இலங்கை பாதுகாப்பான நாடல்ல, அங்கு பிற நாட்டுப் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றார்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள், கடும் தேசியவாதம் மற்றும்மேற்கத்திய எதிர்ப்பும் அதிகரித்து வருகின்றது, அங்கு பிரித்தானிய பெண்கள் தனியாகவோ குழுவாகவோ வீதிகளில் திரியும் போது பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செல்லுங்கள், ஆர்பாட்டங்கள் நடக்கும் இடங்களில் இருந்து தூர விலகி இருங்கள் என்று பிரித்தானிய அரசாங்க சுற்றுலா முகவர் நிலையம் ஒன்று விடுத்துள்ள அறிக்கைக்கு இலங்கை வெளிநாட்டமைச்சுச் செயலாளர் கருணாரட்ன அமுனுகம கடும் எதிர்ப்பை தெரிவிதுள்ளார்.

மேற்படிகுற்றச்சாட்டுகள் யாவும் உண்மைக்குப் பிறம்பானது என்று சாடியுள்ள அவர் இது தொடர்பாக பித்தானியா அரச அதிகாரிகளிடம் கதைக்குமாறு அங்குள்ள இலங்கைத் தூதுவர் கிறிஸ் நோனிசைப் பணித்துள்ளார்.

இலங்கையின் பிரித்தானிய தூதுவர் சாரா மேணிடம் இது தொடர்பாக கேட்ட போது இலண்டன் விட்ட அறிக்கைகுத் தாம் பொறுப்பல்ல என்று கூறிவிட்டார்.

No comments:

Post a Comment