இந்தியாவுக்கும் இலங்கைக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டள்ளதாக வெளிவரும் செய்திகளை முற்றாக மறுத்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, இந்தியாவுடன் இலங்கைக்கு வரலாற்றில் என்றுமில்லாதவாறான நெருக்கமான உறவு தற்போது நிலவுவதாகவும், இரண்டு நாடுகளுக்கும் இடையில் பனிப்போருக்கு பதிலாக குளிர் காதலே நிலவுகின்றது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தியாவின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அடிக்கடி இலங்கைக்கு விஜயங்களை மேற்கொண்டுவருகின்றனர் எனவும், இரண்டு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் முதலீடு மற்றும் பொருளாதாரத் துறைகளில் அதிகளவிலான தொடர்புகள் காணப்படுவதாகவும், இரு நாடுகளும் செயற்பாட்டு ரீதியாக பொருளாதார செயற்பாட்டில் ஈடுபட்டுவருவதாகவும், இவற்றின்மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுகள் மேலும் வலுவடைகின்றன என தெரிவித்துள்ளார்.
மேலும், சுற்றுலாத்துறையிலும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் சிறந்த தொடர்புகள் காணப்படுவதாகவும், இலங்கை மற்றும் இந்திய நாடுகளின் மக்களுக்கு இடையிலான தொடர்பும் மிகவும் பலமாக உள்ளதாகவும், இவ்வாறான நெருக்கமான தொடர்புகள் காணப்படும்போது பனிப்போர் நிலவுவதாக எவ்வாறு கூற முடியும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment