Tuesday, August 7, 2012

சர்வதேச பாதுகாப்பு மாநாடு நாளை இலங்கையில்.

42 நாடுகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன், சர்வதேச பாதுகாப்பு மாநாடு, நாளை கொழும்பில் ஆரம்பமாகும். தொடர்ந்தும் மூன்று நாட்கள் மாநாடு நடைபெறுமென, பிரிகேடியர் றுவன் வனிகசூரிய தெரிவித்துள்ளார். மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள்கட்டமைப்பு போன்ற மனிதாபிமான நடவடிக்கைகளின் பின்னர், இலங்கை ராணுவம் மேற்கொண்ட பணிகளை தொடர்ந்து, இலங்கை ராணுவத்தின் செயற்பாடுகள் மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகளும், இதனூடாக, தெளிவுபடுத்தப்படவுள்ளன.

நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகளும், இலங்கை மற்றும் வெளிநாட்டு அரசியல் பிரமுகர்கள், புத்திஜீவிகள், ராஜதந்திரிகள் மற்றும் அரச பிரதிநிதிகள், சிரேஷ்ட ராணுவ அதிகாரிகளும், இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.

பாகிஸ்தானின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அஸீப் யாஸின் மலீக், தற்போதைய பாகிஸ்தானின் பாதுகாப்பு செயலாளராக செயற்படுகிறார். இவர், மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி, மேஜர் ஜெனரல் ஜி.எச். சேர்கிள், தற்போது கட்டளை தளபதியாக செயற்படுவர், அவரும் மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

பிரிட்டனை பிரதிநிதிவப்படுத்தி சேர். வில்லியம் ஜெப்ரி உரையாற்றவுள்ளார்.

அமெரிககாவை பிரதிநிதித்துவப்படுத்தி கேர்ணல் ரொபின்சன் உரையாறறுவார்.

அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், மஹிந்த சமரசிங்க, ரஜீவ விஜேசிங்க போன்ற அமைச்சர்களும், பாராளும்னற உறுப்பினர்களும் உரையாற்றவுள்ளனர்.

இந்தியா ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி, அமெரிக்காவின் கலாநிதி ரசல் புவார்ட், மற்றும் பேராசிரியர் ஆர்.எம். குக்ரம்ஸ்கி, ஆகியோரும் உரையாற்றவுள்ளனர். லலித் வீரதுங்க, எஸ்.பி. திவாரட்ன, அஜித் நிவாட் கப்ரால், இமெல்டா சுகுமார் ஆகியோரும் மாநாட்டில் உரையாற்றவுள்ளனர்.

மூன்று நாட்கள் நடைபெறும் மாநாடு, கலதாரி ஹொட்டேலில் நடைபெறும். 

No comments:

Post a Comment