பயங்கரவாதம் வடக்கு கிழக்கில் மீள ஊடுருவுவதைத் தடுப்பதற்காக நியாயமான அளவு படையினர் அங்கு வைத்திருப்பது அரசாங்கத்தின் உரிமையும், பொறுப்பு வாய்ந்த கடமையும் என்று வெளிநாட்டமைச்சர் பேராசிரியர். ஜி. எல். பீரிஸ்சும், நகர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் தெரிவித்துள்ளார்கள்.
கொழும்பு கலதாரி ஓட்டலில் கொழும்பைத் தளமாக்கொண்ட இராஜதந்திரிகள் மற்றும் வெளிநாட்டு இராணுவப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்கள்.
வடக்கு மாகாணத்திலிருந்து இராணுவத்தினரை அகற்றுவது என்பதை மறுத்த பேராசிரியர், அம்பாந்தோட்டை உள்ளிட்ட நாட்டின் சகல பகுதிகளிலும் இராணுவம் இருக்கின்றது. வடக்கில் இருந்து இராணுத்தை வெளியேற்றுவது என்பது முற்றிலும் மடத்தனமான செயல் என தெரிவித்தார்.
இந்த மூன்று நாள் கருத்தரங்கின முதலாவது நாளில் தனது "நிலைத்த அமைதி மற்றும் உறுதிப்பாட்டு" என்ற தனது ஆரம்ப உரையில், கடந்த 3 வருடத்தில் அதி கூடியளவு துருப்பினர் வடக்கு கிழக்கிலிருந்து வாபஸ் பெறப்பட்டுள்ளனர். 21000 துருப்பினர் தெற்கிற்கு அகற்றப்பட்டிருகிறார்கள் எனினும் முக்கியமான இடங்களில் படையினர் இருப்பது அவசியம் என்றும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment