ஹொரண பகுதியில் துப்பாக்கிச் சூடு தந்தையும், மகளும் பலி
ஹொரண, மொரகஹஹென பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தந்தையும், மகளும் பலியானதுடன் காயமடைந்த தாய் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மூவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளையில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் இருந்தவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிசென்றுள்ளனர் எனவும், விசாரணைகளை மேறகொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment