Friday, August 24, 2012

பொறுத்தது போதும்! உலக குற்ற நீதிமன்றத்தின் முன்னால் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையை பரிசீலனை செய்யாது, தெரிந்து கொண்டே மக்கள் மரண மடையும் வண்ணம் திட்டமிட்டுச் செயல்பட்டதற்குப் பொறுப்பான அதிகாரிகளை உடனடியாக உலக குற்ற நீதிமன்றத்தின் முன்னால் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று, தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

"ஆர்சனிக்" விஷம் உள்ளிட்ட கடும் உலோகம் சம்பந்தப்பட்ட பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஷஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே இவ்வாறு தெரிவிக்கப்ட்டுள்ளது.

மேற்படி அமைப்பின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கையெழுத்திட்டு அனுப்பியுள்ள கடித்தின் பிரதிகள் ஊடகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுன.அதில் குறிப்பிட்டுள்ள முக்கிய விடயங்களாவன:

1.அமைச்சர் கெகலிய ரம்புக்வெலவின் பொறுப்பற்ற கூற்று தொடர்பான முறைப்பாடு.

2.இராஜரட்டை பகுதியில் உயிரைக் குடிக்கும் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதற்கு உலக
சுகாதார அமைப்பின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தல்.

3."ஆர்கனிக்" அமில பிரச்சினையை மூடி மறைப்பதற்காகச் செயல்பட்ட சகலருக்கும் உரிய
தண்டனை வழங்குதல் பேன்றவையாகும்.

No comments:

Post a Comment