Saturday, August 11, 2012

புலம்பெயர் தமிழர்களின் பொய்ப்பிரசாரங்களால் சமாதானம் நிலவுவது தடைப்படும்: சமரசிங்க

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவளிக்கும் நாடுகள் இவர்களால், மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரசாரங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறின், சமாதானத்தை ஏற்படுத்துவதிலும் வழமை நிலையைக் கொண்டுவருவதிலும் பாதகமான விளைவுகள் ஏற்பட்டு அவை தடைப்பட்டு போகலாம் எனவும் பெருந்தோட்டத்துறை அமைச்சரும் ஜனாதிபதியின் மனித உரிமைத் தூதுவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இன்றைய காலத்தில் பயங்கரவாதம் பல வடிவங்களில் வெளிப்பட்டு பல நாடுகளையும் பாதித்து வருகின்றது. கூட்டுச் செயற்பாடு, தகவல்களை பகிர்ந்துகொள்ளல், ஒத்துழைப்பு என்பவை மூலமே இந்த நாசகார சக்திகளை ஒழிக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

இழந்தவற்றை ஈடுசெய்தல், அறவிடுதல், அரவணைத்தல் என்பவையே பலனளிக்கும். சகல பிரச்சினைகளுக்கும் பொருத்தமான சர்வ நிவாரணி என்று எதுவுமில்லை. இலங்கை அனுபவங்களின் மூலம் கற்று தனக்கென ஒரு தீர்வை ஆக்கிக்கொள்ள வேண்டும் என அமைச்சர் கூறினார்.

நியாயமான ஆதாரமுள்ள குற்றச்சாட்டுக்களை ஆராய வேண்டும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவானது சில சம்பவங்களை குறிப்பிட்டு அவற்றை அரசாங்கத்தில் பாரப்படுத்தியுள்ளது. அரசாங்கம் இராணுவ சட்டத்திற்கு அமைய விசாரணை மன்றங்களை அமைத்துள்ளது.

பல சந்தர்ப்பங்களில் இராணுவ நடவடிக்கைகளின் போது மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. அவ்வாறாயின் இலங்கை மட்டும் வேறு விதமாக நடந்திருக்க வேண்டுமென எதிர்ப்பார்க்கப்படுவது ஏன்? ஏன அவர் வினவினார்.

இரண்டாவது இராணுவ கருத்தரங்கின் இறுதி தினமான இன்று அமைச்சர் சமரசிங்க கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com