Wednesday, August 22, 2012

ஆட்சியாளர்களும் அமைச்சர்களும் தான்தோன்றித் தனமானவர்கள். முன்னாள் நீதிபதி

ஆட்சியாளர்கள் தான்தோன்றித் தனமானவர்கள், அமைச்சர்களும் தான்தோன்றித் தனமானவர்கள். பிரச்சனை நாட்டு மக்களுக்குத்தான். எனவே நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து பொதுவான நடவடிக்கை ஒன்றை எடுக்க வேண்டும் என்று முன்னாள் மேல் நிதிமன்ற நீதிபதி டப்.ரி.எம்.பி. வராவேவ கூறியுள்ளார்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த ஆட்சியாளர்கள் நீதியான மக்களின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும் என்று நாங்கள் கூற வேண்டும். இந்த நாட்டுக்கு அறிவாளிகள் அவசியம் இல்லையா? பல்கலைக் கழகங்கள் மூடிக்கிடக்க வேண்டுமா? பிள்ளைகள் உயர்தரப் பரீட்சை எழுதக் கூடாதா? அரசு இவைகளுக்கு பதில் அளித்தாக வேண்டும். அரசாங்கத்துக்கு இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும்.

கல்வித் துறையில் பாரிய பிரச்சினை எழுந்துள்ளது. சங்கிலித் தொடர்ச்சியாக பிரச்சினைகள் அங்கும் இங்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டுள்ளன. பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் வரைக்கும் அரசேவைகள் ஒழுங்காக நடைபெற மாட்டாது. கடந்து போன இசற் புள்ளி தொடர்பான பிரச்சினைக்கு இன்றுவரை தீர்வு காணப்படவில்லை. இந்த பிரச்சினை ஒரு சிலரின் பிரச்சினை அல்ல. இந்த நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளையையும் பாதிக்கும் பிரச்சினை அல்லவா என்று அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment