தீவிரவாதிகளால் பாகிஸ்தான் இந்துக்களுக்கு அச்சுறுதல்! அவர்களை பாதுகாக்க நடவடிக்கை
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள இந்து மக்கள் பாகிஸ்தானிலுள்ள தீவிரவாதிகளினால் அச்சுறுத்தப்படு வதாக தெரிவித்து அங்கிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து வருவதானால் பாகிஸ்தானிலுள்ள இந்து மக்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானிலிரந்து இந்துக்கள் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து செல்வதனால் பாகிஸ்தான் அரசாங்கம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாகவும், அதனை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் மாகாண தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனை தொடந்து பாகிஸ்தானிலுள்ள இந்துக்களை பாதுகாப்பதற்கு புதிய சட்டம் ஒன்று இயற்றப்படவுள்ளதாக பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment