Monday, August 27, 2012

வன்னி இழக்கின்றது ஒரு பாராளுமன்ற ஆசனத்தை, ஒன்றை பெறுகின்றது மொனறாகல.

ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எணிக்கையை, ஆண்டு தோறும் அங்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கையை வைத்து தேர்தல் ஆணையாளர் தீர்மானிப்பார்.

இதன்படி இவ்வாண்டு மன்னார், வவுனியா மற்றும் முல்லைத் தீவு மாவட்டங்களைக் கொண்ட வன்னித் தேர்தல் மாவட்டம் ஒரு இடத்தை இழக்கின்றது. 2011 ல் அதன் வாக்காளர் எண்ணிக்கை 221,409. அது 2010, 2009ல் முறையே 236,449 மற்றும் 270,707 ஆக இருந்தது.

பிபிலை, மொனராகலை மற்றும் வெள்ளவாய தெகுதிகளை உள்ளடக்கிய மொனராகலை மாவட்டம் 2011 ல் 319,557 வாக்காளரைக் கொண்டிருந்த்து. அது 2010, 2009 ல் முறையே 315,452 மற்றும் 308,230 ஆக இருந்தது.

கடந்த ஆண்டு 10 ஆக இருந்த யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆக குறைக்கப்பட்டதும். அந்த 4 லில் பதுளை, இரத்தினபுரி, மாத்தறை மற்றும் குருணாகல் என்பன ஒவ்வொன்று பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

1 comments :

சிவா ,  August 27, 2012 at 2:31 PM  

புலிகளின் பரிசு என்று சொன்னால் யாராவது அடிக்க வருவயளோ?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com