வெலிக்கடை சிறைச்சாலையில் தேசிக்காய் மழை.
வெலிக்கடை சிறைச்சாலையில் பெண்கள் பிரிவுக்கு அண்மைக் காலமாக போதைப் பொருளுடன் தேசிக்காய் விழ ஆரம்பித்திருப்பதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண் பாதுகாவலர் இல்லாத சமயத்தில் வனாத்தமுல்லை பக்கமிருந்து தினமும் தேசிக்காய் விழுகிறதாம். அவ்வாறு விழும் தேசிக்காய்களை பொறுக்கச் செல்லும் பெண்கள் முட்டி மோதிக் கொள்கிறார்கள் என்றும் தெரிய வருகின்றது.
கைத்தொலைபேசி ஊடாக வரும் சமிக்கைகளுக்கு அமைய குறிப்பிட்ட இடங்களில் தேசிக்காய் விழுகின்றனவாம். இந்த தேசிக்காய்களுக்குள் போதைப் பொருள் நிரப்பி அனுப்பும் தந்திரம் நிலவுகின்றதாம்.
0 comments :
Post a Comment