Monday, August 20, 2012

பிரித்தானியா கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

விக்கிலீக்ஸ் நிறுவன ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு பிரித்தானி யாவிலுள்ள ஈக்வடார் தூதரகம் அடைக்கலம் அளித்துள்ள நிலையில், பிரித்தானியாவிலுள்ள ஈக்வடார் தூதரகத்தின் மீது ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், அந்நாடு கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஈக்வடாரின் நட்பு நாடுகள் எச்சரித்துள்ளன.

விக்கிலீக்ஸ் நிறுவன ஜூலியன் ஸ்தாபகர் அசாஞ்சேவுக்கு பிரித்தானியாவிலுள்ள ஈக்வடார் தூதரகம் அடைக்கலம் அளித்துள்ளது. அவரைக் கைது செய்ய பிரித்தானிய பொலிஸார் தூதரகத்துக்கு வெளியே காத்திருப்பதாகவும், மேலும் அதிரடியாக உள்ளே நுழைந்து அசாஞ்சேவைக் கைது செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இது குறித்து ஆலோசிக்க தனது நட்பு நாடுகளுக்கு ஈக்வடார் அழைப்பு விடுத்திருந்ததுடன், ஈக்வடாரின் கயாகுல் நகரில் இச்சந்திப்பு நடந்தது. வெனிசுலா தலைமையிலான நட்பு நாடுகள் இதில் கலந்து கொண்டன.

இதில் கலந்து கொண்ட கூட்டணி நாடுகள் பிரித்தானியாவை எச்சரித்துள்ளதுடன், ஈக்வடார் தூதரகத்தின்மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் பிரித்தானியா கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளன.

தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள பிராந்திய நாடுகளும் ஈக்வடாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இன்நிலையில் ஈக்வடார் தூதரகத்திலிருந்து மக்களைச் சந்திக்க அசாஞ்சே திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் தூதரகத்தை விட்டு வெளியேறினால் அவர் கைது செய்யப்படுவார் என்ற நிலை நீடித்து வருவதானால் அவர் கட்டடத்தின் மேற்பகுதி அல்லது ஜன்னல் வழியே மக்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com