நியூசிலாந்து படைவீரர்களின் சடலங்கள் நியூசிலாந்திற்கு அனுப்பப்பட்டுள்ளன
ஆப்கானிஸ்தானில் மோதல்களினால் கொல்லப்பட்ட மூன்று நியூசிலாந்து படைவீரர்களின் சடலங்கள், நியூசிலாந்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. நியூசிலாந்து க்ரைஸ்ட்சேர்ச்சிற்கு கொண்டு வரப்பட்ட தமது சகோதரர்களின் பூதவுடல்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, பேர்க்ஹம் ராணுவ முகாமிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான ராணுவ வீரர்கள் வருகை தந்திருந்தனர்.
மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு, அணி வகுப்பு மரியாதை உட்பட ராணுவ கௌரவிப்புகளும் வழங்கப்பட்டன. துருப்பினர்கள் உத்தியோகபூர்வ சீருடை அணிந்து இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டனர்.
ஆப்கானிஸ்தான் பார்மியன் மாகாணத்தில் இவர்கள் கொல்லப்பட்டனர். அடுத்த ஆண்டுக்கு முன்னர் ஆப்கானில் நிலைகொண்டுள்ள சகல நியூசிலாந்து துருப்பினர்களையும் அங்கிருந்து விளக்கிக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக, நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ கடந்த வாரம் அறிவித்தமை, குறிப்பிடத்தக்கது.
1 comments :
Welldone, If u kill afghan civilist , they will kill u.
Post a Comment