புலிகளைவிட மோசமானது மகிந்த அரசாங்கம் – ரணில் விக்கிரமசிங்க.
எனது ஆட்சிக்காலத்தில் சுதந்திரமான பொலிஸ் ஆணையம் செயல்பட்டது. இதனால் பொலிசார் சுதந்திரமாகச் செயல்பட்டு சமூக விரோதிகளைப் பிடித்தனர். சிறுவர், பெண்கள் சுதந்திரமாக திரிந்தனர் என்று சனிக்கிழமை ஹோமாகமையில் இடம் பெற்ற ஐதேக செயற்பாட்டளர்களின் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
இப்போது பொலிஸ் அரசியலாக்கப்பட்டு விட்டது. சிறுவர் துஷ்பிரயோகம் செய்பவர்கள், பெண்களைக் கற்பழித்துக் கொலை செய்பவர்கள் மிகச் சுந்திரமாகத் திரிகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் ஆளும் கட்சி அரசியல்வாதிகளும் அவர்களைச் சார்ந்தோருமே ஆவார்கள். பொலிசார் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது தவிக்கிறார்கள். சமூகத் துரோகிகளை மகிந்த அரசாங்கம் பாதுகாக்கின்றது. ஜூலம்பிட்ட அமர, வம்பொட்டா மறும் பத்தோலயா போன்ற சமூக விரோதிகள் அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுகின்றனர்.
எல்ரிரிஈ யை விட அரசு மோசமாக நடந்து கொள்கின்றது. மகிந்த சிந்தனை மாபியாக்கள், அரசியல் கேடிக் கோஷ்டியினர் தேசிய சேமிப்பு வங்கியைச் சுரண்டி விட்டனர். ஈபிஎஃப் பணத்தைச் சூறையாடி விட்டனர். கல்வி முறைமை சீரழிந்து விட்டது. காமுகர்களும் பெண்களையும் சிறுவர்களையும் கொலை செய்பவர்களும் சுதந்திமாகத் திரிகின்றனர். ஊழல் மிகுந்த மகிந்த அரசைத் தோற்கடித்து எதிர்கால சமுதாயத்தைப் பாதுகாக்கதைக அரசாங்கத்தை நிறுவ வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
0 comments :
Post a Comment