ரஞ்சனுக்கு அரசியலே தெரியாது: அனார்க்கலி
தென் பிரதேசத்திலிருந்து அரசியலுக்கு வந்த அனார்க்கலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ரஞ்சன் ரமநாயக்க இருவரும் நடிகர்கள். ஆனால் இருவரும் இரு அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அண்மையில் சொர்ணவாகினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய இட்டிமல் நாடகத்தில் இருவரின் நட்பையும் காணக்கூடியதாகயிருந்தது.
இட்டிமல் நாடகத்தில் 'ஆதித்திய' என்ற கதாபாத்திரத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற
ரஞ்சன் ராமநாயக்க ஒரு திரைப்பட அத்தியட்சகராக நடிப்பதுடன் அனார்க்கலி 'பூஜா'
என்ற கதாப்பாத்திரத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு நடிகையாக களமிறங்குகின்றார்.
இந்த நாடகத்தை காட்சிப்படுத்தும் நேரத்தில் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனார்க்கலி எதிர்கட்சியிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை இவ்வாறு பகிடியாக 'ரஞ்சன் கீழே பாதாளத்திலே இருக்கின்றார்' என்று சொல்லும் போது ரஞ்சன் தமது அடுத்த காட்சிக்காக உயர்ந்த இடத்தில் இருப்பதைக் கண்ட குழுவிலுள்ள ஒருவர் 'ரஞ்சன் இப்போது உயர்ந்த இடத்தில் இருக்கின்றார்' என்று கூறினார்.
ஆனால் இந்த விடயத்தை புரிந்துகொள்ளாத அனார்கலி அவர்களின் பகிடிக்கு ஆளாகி
கண்கலங்கினார். ஆனால் இட்டிமல் நாடகத்திலிருந்து அனார்க்கலி விலகுவாரா இல்லையா என்பதை இன்னும் வெளிப்படுத்தவில்லை. அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில்தான் ரஞ்சனுக்கு அரசியல் தொடர்பாக எதுவும் தெரியாது என்று பத்திகை ஒன்றிற்கு அனார்க்கலி இவ்வாறு கூறுகின்றார்.
ரஞ்சனுக்கு என்ன தெரியும் ''இவங்க களவாணி' என்று சொல்வது மட்டும்தான்.
'நானும் ரஞ்சனும் நல்ல நண்பர்கள். நடிக்கும் போது அரசியலை சம்பந்தப்படுத்த
மாட்டோம். அரசியலின்போது நடிக்கமாட்டோம். நான் எதிர்க்கட்சியில் யாரையும்
குற்றம் சுமத்தமாட்டேன். ரஞ்சன் அண்ணா நல்லவர். ஆனால் அரசியல் பற்றி எதுவும்
தெரியாது. 'இவங்க களவாணி' என்று சொல்ல மட்டும்தான் தெரியும்.
நாங்கள் இதற்கு முன் ஒரு முறை கூறியபடி நாட்டின் அபிவிருத்திக்காக தனது திருமணத்தை ஒத்தி வைத்த அனார்க்கலி வாழ்க்கையில் திருமணம் செய்ய மாட்டேன் என்ற முடிவில் இருக்கின்றார். இதற்கு காரணம் அவருக்கு ஆண்கள் மேல் நம்பிக்கையில்லை என்று கூறுகின்றார்.
உண்மையில் ஆண்கள் மட்டுமல்ல நான் பெற்ற அனுபவங்களின்படி உலகில் தாய், தந்தையை விட்டால் வேறு எவரையும் நம்ப முடியாது. நாங்கள் அழுதாலும் கோபத்திலிருந்தாலும் சந்தோஷத்திலிருந்தாலும் தாய், தந்தை மட்டும்தான் எப்போதும் ஒரேமாதிரி ஆதரிப்பார்கள். வெளியிலுள்ள வேறு எந்த ஆண்களும் அவ்வாறு இருக்கமாட்டார்கள்.
திருமணமாகி 5,10 வருடங்கள் அவ்வாறு அன்பாக இருக்கலாம். அதற்கு பின் அவ்வாறு
இருப்பார்கள் என்று கூற முடியாது. அதனால் எனக்கு ஆண்கள் மேல் நம்பிக்கையில்லை.
திருமணமும் நம்பிக்கையில்லாதது என்றுதான் நினைக்கின்றேன். பிள்ளைகள் இருக்கின்ற குடும்பம் திருமண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டால் அது பிள்ளைகளுக்கு ஒரு வேதனை. நான் திருமணம் செய்ய மாட்டேன். நான் அந்த முடிவை எடுத்துவிட்டேன். அவ்வாறானதொரு தொடர்பை ஏற்படுத்தி வேதனையை அனுபவிக்க நான்
விரும்பவில்லை.
கொசிப்லங்காவிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.
0 comments :
Post a Comment