சர்வதேச வானூர்தி நிலையமாகியது இரத்மலானை.
இரத்மலானை வானூர்தி நிலையம் சிறியரக வானூர்திகளுக்கான சர்வதேச வானூர்தி நிலையமாகப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது என்று, குடிசார் வான் பயண அதிகாரசபைத் தலைவர் எச்.எம்.சி. நிமலசிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாகவும், உலகெங்கிலும் உள்ள மக்களும், விமானிகளும், இதனைக் கண்ணுற்றிருப்பார்கள் என்றும், சர்வதேச ஜெட் வானூர்திகள் மற்றும் பயணிகளின் தேவைகளைக் கவனிக்க குடிவரவு மற்றும் குடியகல்வுப் பீடமும் செயற்படுத்தபடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment