திருகோணமலையில் இந்திய விசேட பொருளாதார வலயம் அமைக்கப்படும். அதில் இந்தியாவின் தொழில் சாலைகள் அமைக்கப்படும் என்றும் அதற்கான சிறப்பான செயலாற்றுகைக் கட்டமைப்பு உருவாக்கப்படும் என்றும் இந்திய வர்த்தக, தொழில் மற்றும் நெசவுத்துறை அமைச்சர், இந்தியத் தூதுவர் மற்றும் இருநாட்டுப் பிரதிநிதிகள் பங்குபற்றிய கலந்துரையாடலில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பொருளாதார வலயம் அமைப்பது தொடர்பான பரிந்துரைகளை 90 நாட்களுக்குள் சமர்ப்பிப்பதற்கு இருநாட்டினரையும் கொண்ட செயலாற்றுக் குழு அமைக்கப்பட்டது. இலங்கை சார்பில் அமைச்சர்கள் பசில், அமுனுகமை மற்றும் ரிசாத் கலந்து கொண்டனர்.
இவ்விடயம் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் தொதிப்பை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிவதுடன் எதிர்வரும் காலங்களில் இம்முயற்சிக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment