Sunday, August 5, 2012

பிரித்தானியாவில் மகளை கொலை செய்த பாக்கிஸ்தானிய பெற்றோருக்கு ஆயுட்தண்டனை.

லண்டன்: பிரிட்டனில் ஷபிலியா அகமது என்ற பதினேழு வயதுப் பெண்ணை கொலை செய்த அவரது பெற்றோருக்கு பிரிட்டன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தான் வம்சாவளியினரான இப்திகார் அகமதுவும் அவரது மனைவி பர்சானா அகம்மதுவும் தங்கள் இரு மகள்களுடன் பிரிட்டனில் வசித்து வந்தனர். அவர்களின் மூத்த மகள்பெயர் ஷபிலியா, அவர்களின் இளைய மகள் அலீஷா.

பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை ஷபிலியா காதலித்துள்ளார். அதோடு அவர் மேற்கத்திய கலாசாரப்படி உடையணிய பழகிக்கொண்டார். இதற்கு எதிர்ப்புத்தெரிவித்த அவரது பெற்றோர் 2003ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஷபிலியாவை வீட்டில் சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர் என்று தங்கை அலீஷாவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இவர்கள் பிரிட்டனில் சௌயரில் உள்ள வாரிங்டன் பகுதி அடுக்குமாடி வீடு ஒன்றில் வசித்து வந்தனர். கடந்த 2003ம் ஆண்டு மாதம் ஷபிலியா திடீரென காணாமல் போனார். ஆறு மாதங்களுக்குப் பிறகு கென்ட் ஆற்றங்கரையோரம் ஷபிபலியா கொலைசெய்யப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.




No comments:

Post a Comment