மீளக் குடியமர்ந்தோருக்கு மனிதாபிமான உதவிக்கு நிதிகோருகின்றது ஐ.நா.
30 வருட போர் 2009 ல் முடிவுற்றாலும் உண்ணாட்டில் இடம் பெயர்ந்தோரின் பிரச்சினை இன்னும் முடிவடையாமல் இருக்கின்றது. எனவே அதற்கு உதவுவதற்கு மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதியை இலங்கைக்கு தொடர்ந்து வழங்கு வதற்கான பேச்சுகளை ஐக்கிய நாடுகள் சபை மீளவும் ஆரம்பித்துள்ளது என்று செவ்வாய்க் கிழமையன்று, ஐநா மனிதாபிமான வதிவிட இணைப்பாளர் சுபினேய் நந்தி உலக மனிதாபிமான நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது குறிப்பிட்டார்.
வடக்கில் உள்ள சமூகங்களிடையே தீர்க்கப்படாத பல அடிப்டைப் பிரச்சினைகள் இன்னும் நிலவுகின்றன. இவை மீளக்குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களில் சுத்தமான குடிநீர், வீடு மற்றும் உணவுப் பாதுகாப்பு என்று தொடர்கின்றன. வழக்கமான வாழ்க்கைகுத் திரும்பு முன்னர் அவர்களுக்கு இவை தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment