இது சிங்கள பௌத்த நாடு! இருந்தால் ஒழுங்காக இருங்கள் இல்லாவிட்டால் ஓடிவிடுங்கள்
ரவூப் ஹக்கிம் மற்றும் அசாத்சாலி போன்றோர் மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதத்தில் பல்வேறு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்- கபொதட அத்தே ஞானீஸ்வர தேரர்.
மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதத்தில் பல்வேறு பிரசாரங்களை மேற்கொண்டு வருபவர்களுக்கு பௌத்த மக்கள் பொறுப்பாளியாக மாட்டார்கள் எனவும், 30 ஆண்டுகளாக யுத்தம் எழுந்தது இவ்வாறான தன்முனைப்பான பேச்சுகளினாலும், ஆட்சியாளர்களினாலும் தான் என்று கபொதட அத்தே ஞானீஸ்வர தேரர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் மேடைகளில் மதவாத பிரச்சாரங்கள் மேற்கொள்வது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், மாகாண சபைத் தேர்தல் மேடைகளில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிம் மற்றும் அசாத்சாலி போன்றோர் போகின்ற இடமெல்லாம் சிங்கள, முஸ்லிம் சமய ஐக்கியத்துக்கு பங்கம் விளைவிக்கும் கருத்துகளைக் கூறிவருகின்றனர். வரலாற்றுக் காலம் முதல் பௌத்த சிங்களப் பண்பாட்டில் பேணிவளர்க்கப்பட்ட நாடு இது.
இங்கு அந்நிய மதங்களுக்கு பாரிய சுதந்திரம் உண்டு. அந்த வசதியோடு ஒழுஙகாக இருக்கிறதென்றால் இங்கு இருக்கலாம். இல்லாவிட்டால் ஓடிவிடலாம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முஸ்லிம் சமயத்தை வளர்க்கவேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. வர்த்தகம் செய்ய வேண்டாம் என்று கூறவில்லை. அடிப்படைவாத, தூர நோக்கற்ற தலைவர்கள் இவ்வாறான கதைகளை மக்கள் முன் கூறுகின்றார்கள். ரவூ ஹக்கிம் பொறுப்பான ஓர் அமைச்சர். அவர் கூறுவது அரசியல் நேக்கத்திலாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment