ஐக்கிய எதிர்க்கட்சியை கட்டியெழுப்புவதற்குத் தேவையான இந்திய உதவியை பெற்றுக் கொள்வதற்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் உயர் அதிகாரியொருவருடன் கடந்த 14 ம் திகதி சரத் பொன்சேகா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொழும்பு 7 ல் உள்ள ஜனநாயக தேசிய முன்னணியின் பாரளுமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.
அதன்போது ஐக்கிய எதிர்க்கட்சியைக் கட்டியெழுப்புதல், அதன் செலவுக்கான நிதி என்பன பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது. அதற்கமைய, தற்போது அரசாங்கத்தில் விரக்தியுற்றிருக்கும் சிரேஷ்ட அரசியல் வாதிகள், அதுபோல ஐக்கிய தேசியக் கட்சியில் விரக்தியுற்றிருக்கும் அரசியல்வாதிகளுடன் இது தொடர்பாக செய்ய வேண்டியது பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதற்குத் தேவையான நிதியை இந்தியா ஊடாக நோர்வேயிடமிருந்து பெற்றுக் கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக அறிய வருகின்றது.
No comments:
Post a Comment