ஐரோப்பாவின் பொருளாரத்துக்கு புலம்பெயர்ந்த தமிழரின் பங்களிப்பு பாரியது. பேர்ணாட் சாவேஜ்
நாடுகடத்தப்படவிருக்கும் வெளிநாட்டோரைத் தங்கவைப்பதற்காக 11.6 மில்லியன் ரூபா செலவில் நுகேகொடை, மிரிஹானை பொலிசில் புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தைத் திறந்து வைத்துப் பேசிய இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றுயத்தின் தூதுவர் பேணாட் சவேஜ், ஐரோப்பாவின் பொருளாதாரத்துக்கு இலங்கையில் இருந்து குடி பெயர்ந்து சென்ற தொழிலாளர்கள் பாரிய பங்களிப்பைச் செய்துள்ளனர் என்றும் ஐக்கிய இராச்சியத்தின் தேசிய சுகாதார சேவையை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம் என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் பேசுகையில் முறையற்ற விதத்தில் குடிவருவோர் கூட தங்களது அடிப்படை உரிமையையும் கௌரவத்தையும் பாதுகாத்துக் கொள்ள உரிமையுமடையவர்கள். இந்த தங்கும் நிலையமானது இதற்கு ஒரு முன்மாதிரியான உதாரணமாகத் திகழும். தற்போழுது தொழிலாளர் குடிபெயர்வு பலதிசைகளில் பாய்ந்து செல்கின்றது. சகல அரசாங்கங்களுக்கும் அது தகுந்த முறையில் கையாளப்பட வேண்டும் என்றதோர் அக்கறை இருகின்றது. அத்தேவை இலங்கையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஐரோப்பிய ஒன்றியம் இதற்கு நிதியளித்துள்ளது. இதற்கான பாராமரிப்புச் செலவை இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் பொறுப்பேற்றுள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பு அதிகாரி ஒருவர் கூறினார். ஆண்களுக்கும் பெண்களுக்கும் என்று வேறுவேறான பிரிவுகளுடன் 40 படுக்கைகள் கொண்டதாக இதந் நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
1 comments :
என்ன சொல்றார் இவர்? இங்கிருந்து சென்ற நம்ம ஆட்கள் நன்றாக வைத்தியசாலைகளை கூட்டுவார்களாமா? ரொம்ப நன்றயுள்ள மனிதர், இல்லாட்டி நாற்றம் எடுக்குமெல்லே.
Post a Comment