இந்தியாவுக்காக தமது உயிரைத் தியாகம் செய்த இந்தியப் படை வீரர்களுக்கும், அலுவலர்களுக்கும் வழங்கப்படும் அதிவுயர் விருது "பரம் வீர் சக்ரா" விருதாகும். இந்த விருது இதுவரை 21 பேருக்கே வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் இலங்கையில் இந்திய அமைதிப்படை நடவடிக்கையின் போது பலியான மேஜர் பரமேஸ்வரன் ஆவார்.
இலங்கையில் அமைதிப்படை நடவடிக்கையின் போது பலியான இந்திய வீரர்களின் பெயர்கள் அடங்கிய நினைவுத்தூபி ஒன்று இலங்கைக் கடற்படையினரால் கொழும்பில் 2008 ல் அமைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கழித்து 2010 ல் இந்தியத் தூதுவர் அசோக் மேத்தாவால் திறந்து வைக்கப்பட்டது.
இதில் மிகவுயர் விருதான "பரம் வீர் சக்ரா" விருது பெற்ற மேஜர் பரமேஸ்வரனின் பெயருக்குப் பின்னால் இரண்டாந் தர விருதான "மகா வீர் சக்ரா" அடைமொழி பொறிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சு வழங்கிய பெயர்ப் பட்டியலில் இருந்தே இந்தப் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து வரும் முக்கிய பிரமுவர்கள் இங்கு சென்று தமது அஞ்சலியைச் செலுத்துவர்.
கடந்த புதன்கிழமை இந்திய சுதந்திர தின நிகழ்சிகளுக்காக அங்கு சென்ற சென்னை ஊடகவியலாளாரான ஆர.கே. ராதாகிரிருஷ்ணன் இந்த தவறைக் கண்டுபிடித்துளார். இந்திய அமைதி காக்கும் படையில் பணியாற்றிய, தற்போதைய இந்திய இராணுவத் தளபதி மேஜர் வி.கே. சிங், முன்னால் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம், மற்றும் எதிர்க்கட்சித தலைவர் சுஷ்மா சிவராஜ் உட்படப் பலர் இதனைத் தரிசித்திருக்கிறார்கள். ஆனால் யாருமே இதனைக் கவனிக்கவில்லை என்று மேற்படி இராதாகிருஷ்ணன் ஆதங்கப்படுகின்றார்.
No comments:
Post a Comment