Friday, August 31, 2012

பயங்கரவாதத்தை முறியடிக்க இலங்கை சகல வழிகளிலும் ஆதரவளிக்கும் - ஜனாதிபதி

இலங்கை அரசாங்கம் அனைத்து விதமான பயங்கரவாதத்திற்கு எதிரான பல்முனை பிரயத்தனங் களுக்கும் ஆதரவளிக்கும் என்று 16 ஆவது அணிசேரா நாடுகளின் மாநாட்டில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர் அங்குதொடர்ந்தும் உரையாற்றுகையில், சமாதானம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் நாம் தொடர்ந்தும் முழுமையான ஆதரவை வழங்குவோம் எனவும், பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டிருக்கும் நாடுகளுக்கு ஏனைய சர்வதேச நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை- பூகோள ரீதியாக அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்தினால் அச்சுறுத்தப்பட்டுள்ளது எனவும், பயங்கரவாதத்தை முறியடித்ததன் பின்னர் சவால்களை வெற்றி கொள்வதற்கு தமது அரசாங்கத்திற்கு மக்களை அடிப்படையாக கொண்ட செயற்பாடு ஒன்று அவசியமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகள், அணிசேரா நாடுகளின் கொள்கை என்பவற்றில் உள்ளவாறு ஒரு நாட்டின் உள்ளக விவகாரங்களில் பிறநாடுகள் தலையீடு செய்யக்கூடாது என்ற வாசகத்தை அவதானமாக கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தையும், இரட்டைக் கொள்கைகளின் போது ஒரு தரப்பினருக்கு மாத்திரம் பலனைத் தரக் கூடிய விடயங்கள் உள்ளடங்கியிருக்கக்கூடாது என்றும் இதன்போது வலியுறுத்தினார்.

"சவால்களுக்கு மத்தியில் ஒன்றிணைந்த நிர்வாகத்தின் ஊடான நிலையான சமாதானம்' என்ற தொனிப்பொருளில் இந்த முறை அணிசேரா நாடுகளின் மாநாடு இடம்பெறுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com