புலி ஊடகச் செய்தியை நம்பி மூக்குடைபட்டார் ஜேவிபி பிமல்
எல்ரிரிஈயினரைத் தோற்கடிக்கும் போர் நடந்து கொண்டிருந்த போது, போர்க்களத்தில் நின்று தமது உயிரைப் பணயம் வைத்து தெற்கில் உள்ள மக்களுக்கு உண்மையான போர்ச் செய்திகளை வழங்கிக் கொண்டிருந்த தேசிய தொலைக்காட்சியைச் சேர்ந்த சமன் குமார சாமவிக்கிரமவுக்கு எதிராக அண்மையில் தெரண மின்னூடகத்தில் நடைபெற்ற விவாத மேடையில் பல குற்றச் சாட்டுகளைச் சுமத்திக் கொண்டிருந்த மவிமு வின் முனாள் பா.ம. உறுப்பினர் பிமல் ரத்னாயக்கா, மேற்படி நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சம்பந்தப்பட்ட சமன் குமார ராமவிக்கிரம தொலைபேசி ஊடாக கேட்ட கேள்விகளால் திக்கு முக்காடுப் போனார் என்ற அறிய முடிகிறது.
யுத்த காலத்தில் சிறைபிடிக்கப்பட்ட எல்ரிரிஈ உறுப்பிர்களின் 8 மடிக்கணினிகளை ராமவிக்ரம எடுத்துக் கொண்டு வரும்போது மதவாச்சி சோதனைச் சாவடியில் பிடிபட்டார் என்றும் பிரித்தானிய சனல்-4 க்கு வீடியோ வழங்கியதும் இவர்தான் இது பற்றி அரசு விசாரணை எதுவும் நடத்த வில்லை என்றும் பல குற்றச் சாட்டுகளை ரத்னாயக்கா கூறினார். அது மாதிரிதான் பல ஊழல் இணைய தளங்னளும் செயல்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
இக்குற்றச்சாட்டுக்கள் தொகுடர்பில் சமநேரத்தில் தொலைபெசியூடாக தொடர்பு கொண்ட சமன் குமார, பிமல் ரத்னாயக்கா கூறுவது எந்த ஆதாரமும் அற்ற குற்றச்சாட்டுக்கள் என்றும், இராணுவம் உள்ளிட்ட இந்த நாட்டு மக்கள் மீது சேறு பூசும் லங்காஈநியூஸ் போன்ற இணையத்தளங்கள் தான் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தன என்றும் தாம் சனல்-4 இணையத்துக்கு எதிராக எவ்வாறு போராடினோம் என்பதை பாதுகாப்பு அமைச்சில் விசாரித்து தெரிந்து கொள்ளலாம் என்றும் சமன் குமார விளாசித்தள்ளினார்.
0 comments :
Post a Comment