பாராளுமன்றத்தில் இருக்கைகள் இருக்கின்றன. அமைச்சர்மாருடைய இருக்கைகள் இருக்கின்றன. ஜனாதிபதி நாற்காலியும் இருக்கின்றது. அவை காலத்துக்குக் காலம் மாறுகின்றது. ஆனால், மாறாத ஒரே ஆசனம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவின் ஆசனம்தான் என நீர் வழங்கல் முகாமைத்துவ அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் இருபத்தைந்து ஆண்டுகளாக அது மாறியதில்லை எனவும் எதிர் காலத்திலும் அது மாற முடியாது அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தல் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்த அவர் இந்த முறையும் ஐ.தே.க தோல்வியை தழுவும் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி வாகை சூடும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment