Saturday, August 18, 2012

கிழக்கு மாகாண விளையாட்டு மாநாடு மட்டக்களப்பில்

விளையாட்டுகளின் தரத்தை உயர்த்து வதற்கான ஏழாண்டுத் திட்டத்தின் கீழ் ஊடாக விளையாட்டு வீரர்களை அடையாளம் காணவும், பயிற்றுவிப்ப தற்குமான 9 வது மாகாண விளையாட்டு மாநாடு கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பு பிரதேச செயலகத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தலைமையில் நடை பெறுகின்றது.

கிராமிய விளையாட்டுகளை மேம்படுத்தவும், ஊடக விளையாட்டு வீர்ர்களை தேசிய மட்டத்தில் அடையாளம் காணவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், மாவட்ட விளையாட்டுக் குழுக்களை நிறுவவும், விசேடமாக விளையாட்டுத் திட்டங்கள், விளையாட்டுச் சக்தி நிகழ்ச்சிகள் போன்றவற்றை அறிமுகப்படுத்தவும், விளையாடுதுறை அமைச்சு எதிர்பார்க்கின்றது என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment