இலங்கைக்கு எதிராக வாக்களித்த மூன்று நாடுகளின் பிரதிநிதிகளையும் மனப்பூர்மாக வரவேற்கிறோம்
இலங்கை மீது சுமத்தப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அனைத்து நாடுகளுக்கும் விளக்கமளிக்கப்பட்டு வருவதாகவும், ஐ. நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக வாக்களித்த மூன்று நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர் எனவும், இவர்களை நாம் மனப்பூர்மாக வரவேற்கிறோம் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கைமீது குற்றம் சுமத்தும் நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நாட்டின் உண்மை நிலையை நேரில் கண்டறிய வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும், இதனடிப்படையிலேயே இந்திய நாடாளுமன்றக் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு உண்மை நிலைகளை அறிந்து சென்றுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் தொடர்ந்து இயந்திரக் கோளாறுகள் எற்படுவதனால் மின்வெட்டுக்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில் திட்டமிட்ட சதி முயற்சிகளினால் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இயந்திரக் கோளாறுகள் ஏற்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்தி தடைப்படுவதைப் பாரிய பிரச்சினையாகக் கருத முடியாது. எனினும் எதிர்பார்த்த உற்பத்தி கிடைக்காவிட்டால் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படும் எனவும், நுரைச்சோலையில் மின் உற்பத்தி தடைப்படக் காரணம் திட்டமிட்ட சதி முயற்சிகளா அல்லது தொழில்நுட்பக் கோளாறுகளா என்பது பற்றி உறுதியாக கூற முடியாது என ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
0 comments :
Post a Comment