Tuesday, August 28, 2012

குறைந்த வருமானம் பெறும் மக்களின் வீடில்லா பிரச்சினைக்கு தீர்வு – விமல்

நகரங்களில் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வீடில்லா பிரச்சினைக்கு, துரித தீர்வுகள் வழங்கப் படவுள்ளதாகவும், 2012 உலக குடிசன தினத்திற்கு இணைவாக, புதிய வேலை த்திட்டங்கள் அமுல்ப்படுத்தப்பட்டு ள்ளதாக, அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவிக்கிறார்.

நகர பிரதேசங்களில் குறைந்த வருமானம் பெறுவோருக்காக அமுல்ப்படுத்தப்பட்டுள்ள இந்த செயற்திட்டத்தினூடாக, பகுதியளவில் வீடுகளை நிர்மாணித்துள்ளோருக்கு நிதி உதவிகள் வழங்கப்படுவதாகவும், இவர்களது வீடுகளை முழுமையாக பூர்த்தி செய்து கொள்வதற்காகவே, இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

கடுவெல பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இவ்வாறு கூறினார்.

ஜனசெவன திரிய நகர வீடமைப்பு வேலைத்திட்டத்தினூடாக, 100 மில்லியன் ரூபா பெறுமதியான வீடமைப்பு நிதி உதவியும், அமைச்சரினால் வழங்கப்பட்டது. பல்வேறுபட்ட நெருக்கடிகள் காரணமாக, நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்ய முடியாதுள்ள குடும்பங்களுக்காக, வீடுகளை நிர்மாணிப்பதற்கென, ஜனசெவன திரிய செயற்திட்டம், அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com