Wednesday, August 15, 2012

அவுஸ்திரேலியாவிற்கு வெளியே அகதி முகாம்களை அமைக்க பாராளுமன்றம் அங்கீகாரம்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லும் சட்டவிரோத குடியேற்ற காரர்களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளதால், தமது நாட்டிற்கு வெளியே அகதி முகாம்களை அமைக்கும் சட்டத்தினை அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தின் கீழ்சபை உறுப்பினர்கள் அங்கீகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் சட்டவிரோத குடியேற்றகாரர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து, நிபுணர்கள் குழுவொன்றின் அறிவுரைக்கிணங்க, இதனுடன் தொடர்புபட்ட சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இது தொடர்பான வாத, பிரதிவாதங்கள் இரண்டு நாட்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து ,ஆளும் தொழிற்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகியன அங்கீகரித்துள்ள நிலையில் அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தின் கீழ்சபையில் அங்கீகரிக்கப்பட்ட இச்சட்டம் செனட் சபைக்கு சட்டமூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் கெவினின் அரசாங்கத்தினால், கொள்கை ரீதியாக 2008 ஆம் ஆண்டு அகதி முகாம்கள் மூடப்பட்டமை குறிப்பிடத்தது. இன்நிலையில் இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையால் அரசாங்கத்தினால் நாட்டிற்கு வெளியே பப்புவா நியூகினியா மற்றும் நவுறு தீவுகளில் அகதி முகாம்களை மீளத்அமைக்கும் நடவடிக்கையை முன்னெடுக்க முடியும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலாட் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment