Wednesday, August 8, 2012

காற்றாடி மூலமான மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்க இணக்கம். சம்பிக்க

காற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, தேசிய மின் கட்டமைப்புடன் இணைத்துக்கொள்வதற்கு, மின்சார சபை தயாராகவுள்ளது. 30 மெகா வோட்ஸ் மின்சாரம் நாளை மறுதினம் முதல், தேசிய மின் கட்டமைப்புடன் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக, அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டளவில், இலங்கையின் மின் தேவையில் 20 சதவீதம் சூரிய சக்தி மற்றும் காற்றின் மூலம் பெற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதனடிப்படையில், காற்றின் மூலம் பெறப்படுகின்ற 30 மெகா வோட்ஸ் மின்சாரம், மூன்று மின் கட்டமைப்புகளை அண்டியுள்ள தேசிய மின் கட்டமைப்புக்கு ஒரே தடவையில் இணைத்துக்கொள்ளும், நடவடிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

தளுவ- நிர்மலபுர, புத்தளம்-லக்விஜய அனல் மின் உற்பத்தி நிலையம், சேதபொல கலப்பை அண்டிய பகுதியிலும், மின் கட்டமைப்புகள் அமையப்பெற்றுள்ளன. இந்த காற்று மின் கட்டமைப்பு மூன்றின் மூலமும் வருடத்திற்கு 90 ஜிகோ வோட்ஸ் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்மூலம் நாட்டின் மின் உற்பத்தி தேவையில் ஒரு சதவீதத்தினை பூர்த்தி செய்ய முடியுமென, மின்சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக தெரிவித்துள்ளார். 7 ஆயிரத்து 200 மில்லியன் ரூபா முதலீட்டினூடாக, நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மின் கட்டமைப்புக்காக, தொழில்நுட்ப உதவிகளை, உள்நாட்டு பொறியியலாளர்கள் வழங்கியுள்ளனர். அதேபோன்று காற்று இந்த காற்று சக்தி இயந்திரமானது, உலகில் காணப்படுகின்ற நவீன தொழில்நுட்ப இயந்திரமெனவும், அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment