Thursday, August 16, 2012

மற்றுமொரு வெள்ளை வேன் கடத்தலின் உண்மை அம்பலத்துக்கு வந்துள்ளது

பிரான்ஸில் இருந்து விடுமுறைக்காக இலங்கை வந்த ரொமிலா, வெள்ளை வானில் கடத்தப்பட்டதாக சில தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. சுன்னாகத்தை சொந்த ஊராகக் கொண்ட தம்பிராசா மற்றும் டைசிரணியா ஆகியோரின் மகளாகிய ரொமிலாவும் 2004 ஆம் ஆண்டு பிரான்சிக்குச் சென்று அந்நாட்டின் குடியுரிமையை பெற்றிருந்தார்.

கடந்த 2012.06.25 ஆம் திகதி பிரான்ஸ்சிலிருந்து விடுமுறையை கழிப்பதற்காக ரொமிலா தனது குடும்பத்துடன் இலங்கை வந்திருந்தார்.

விடுமுறையை ஊரில் கழித்துவிட்டு மீண்டும் பிரான்ஸ்க்கு செல்வதற்காக 2012.08.01ஆம் திகதி கொழும்புக்குச் சென்று அங்குள்ள எப்பலே என்ற விடுதியில் தங்கியிருந்தனர், மறுநாள் 02ஆம் திகதி தங்கிருந்த இடத்திற்கு அருகாமையில் இருந்த கொட்டஞ்சேனை மாதா தேவாலயத்திற்கு வழிபடுவதற்காகச் சென்றள்ளனர்.

கோவிலுக்குச் சென்றவேளை வெள்ளை வானில் வந்த இனம் தெரியா நபரினால் ரொமிலா பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டதாக ரொமிலாவின் தாயாராகிய தம்பிராசா டைசிரணியா கொட்டஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்படும் செய்திருந்தார். என பல ஊடகங்கள் விபரித்திருந்தன.

கடத்தலின் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ரொமிலா விடுமுறையில் யாழ்ப்பாணத்தில் இருந்த நாட்களில் அவர்களின் ஊரைச் சேர்ந்த அமல்ராஜ் என்ற இளைஞனுடன் காதல் தொடர்புகளை எற்படுத்திக் கொண்டிருந்தார். அவர்களுடைய காதல் குடும்பத்தினருக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து குடும்பத்தினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ரொமிலா மீண்டும் பிரானஸ்க்கு செல்லவும் விரும்பவில்லை. ஆனால் குடும்பத்தினரின் வற்புறுத்தலினாலேயே மீண்டும் செல்வதற்கு சம்மதித்துள்ளார்.

இவர்கள் கொழும்பிலிருந்த போது, அமல்ராஜின் தாயார் ரொமிலாவின் தாயாருடன் தொலைபேசியில் உரையாடியவேளை தாங்கள் கொழும்பிலுள்ள விடுதி ஒன்றில் தங்கி இருப்பதாகவும் 2012.08.04 ஆம் திகதி பிரான்ஸிக்குச் செல்வதற்கு உத்தேசித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதே சமயம் அமல்ராஜ் ரொமிலாவுடன் தொடர்பை ஏற்படுத்தி 2012.08.03. ஆம் திகதி கோயிலுக்குச் செல்லும்வேளை ரொமிலாவை அழைத்துச் சென்று திருமணம் செய்வதாக ரொமிலாவிடம் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து வான் ஒன்றில் வந்த அமல்ராஜ் ரொமிலாவை வவுனியாவிற்கு அழைத்துச் சென்றதுடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

பின்னர் 2012.08.04ஆம் திகதி இரவு 11.00 மணியாளவில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு வந்த அமல்ராஜ் மற்றும் ரொமிலா தங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் ரொமிலா கடத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என்றும் தெரிவித்ததோடு தாங்கள் வவுனியாவிற்கு சென்று அங்கு வாழப்போவதாகவும் கூறிச் சென்றுள்ளனர்.

உண்மை ஒரு புறம் இருக்க, நாளாந்தம் வெளியாகும் சில தமிழ் பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களில் "பிரான்ஸிலிருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த பெண் மீண்டும் பிரான்ஸிக்கு செல்வதற்காக சென்ற வேலை கடுநாயக்க விமானநிலயத்தில் வைத்து வானில் வந்த இனம் தெரியாதொரால் கடத்தப்பட்டார்" என்ற செய்தி வெளியாகியிருந்தது.

இவ்வாறான உறுதிப்படுத்தப்படாத தகவல்களை வெளியிடுவதன் மூலம் இலங்கையில் நிலவும் அமைதியான சூழ் நிலையைக் சீர்குழைப்பதுடன், வெளிநாடுகளில் இருந்து விடுமுறைகாலங்களைக் கழிப்பதற்காக இலங்கைக்கு வருபவர்கள் மத்தியில் அச்சத்தையும் எற்படுத்துகின்றது.

நன்றி விடிவு.

No comments:

Post a Comment