போலிக் கப்டன் இதமல்கொட!
எம்பிலிப்பிட்டி போக்குவரத்துப் பொலிசார் நேற்றுமுன்தினம் கடமையில் ஈடுபட்டிருந்த போது இராணுவக் கப்டன் ஒருவருக்கான சீருடையில் மோட்டார் சைக்கிளில் சென்றவரை நிறுத்தி விசாரித்த போது ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் கப்டன் இதமல்கொட என்ற பதவி அடையாள அட்டையை காட்டினார். எனினும் பொலிசார் தேசிய அடையாள அட்டையை கேட்டபோது, அவரது மோட்டார் வண்டி மற்றும் உடைடமைகளைக் கைவிட்டுவிட்டு வந்து கொண்டிருந்த ஒரு வாகனத்தை நிறுத்தி அதில் ஏறிச் சென்றுவிட்டார் போலிக்கப்படன். அவர் ஏமாற்றுப் பேர்வளி என்று கூறியுள்ள பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண அவனைப் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெவித்துள்ளார்.
0 comments :
Post a Comment