நாடு வீறு கொண்டு முன்னேறிச் செல்கின்றது – கோட்டாபய ராஜபக்ஷ
சமாதானம் வந்த பிறகு தங்கள் முன்னால் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய தொழில் வாய்ப்புகளைக் கைப்பறிக் கொள்வதற்கு எதிகாலத் தலைமுறை தயாராக இருக்க வேண்டும் என்று பாதுகாப்பு மற்றும் நகரபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ நேற்று முன்தினம் குறிப்பிட்டார்.
பாதுகாப்புச் சேவைக்கலூரியில் பாதுகாப்பு மற்றும் நகரபிவிருத்தி அமைச்சின் கீழ், தேசிய பாதுகாப்பு நிதியம் 7 வது தடவையாக நடாத்திய விரு சிசு பிரதீபா நிகழ்ச்சியில் உரையாற்றிய போது அவர் அதனை குறிப்பிட்டார்.
பயங்கரவாதம் ஒழிக்கபட்ட பின்னர் நாடு வீறு கொண்டு முன்னேறிச் செல்வதாகவும், பெரிய அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக பல்வேறுவகையான தொழில் வாய்ப்புகள் உருவாக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாட்டிற்காகத் தங்களின் உயிர் மற்றும் உறுப்புகளை இழந்த படைவீர்ர்களுக்கு முழுநாடும் நன்றுயுடையதாக இருக்கின்றது என்றும் போரின் போது உயிர் மற்றும் உறுப்புகளை இழந்த 285 இராணுவ மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2010, 2011 ல் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் விசேட சித்தி பெற்ற பிள்ளைகளுக்கு நிதியுதவி மற்றும் பரிசுகள் வழங்குவதற்காக இந் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆசிரியர்களுக்கு சேவைப்பராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
0 comments :
Post a Comment