நித்யானந்தா (கடவுள்) ஆண்மை பரிசோதனை நாளை தெரியவரும்
"எனக்கு கொஞ்சம் டயம் கொடுங்கள்" என்று நித்யானந்தா, வைத்துள்ள கோரிக்கை, ஏற்கப்படுமா என்பது நாளை தெரியவரும். ஆண்மை பரிசோதனை மேற்கொள்வதற்கு கால அவகாசம் கோரும் நித்தியானந்தாவின் மனு நாளை கர்நாடகாவில் விசாரணைக்கு எடுக்கப்படுகிறது.
நங்கையருடன் லீலைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில் சிக்கிய நித்தி சுவாமிகளை, ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராகுமாறு கர்நாடக சி.ஐ.டி. பொலீஸ் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஒரு தடவைக்கு ஏழு தடவைகள் அனுப்பியும், நித்யானந்தா பாராமுகம் காட்டிவிட்டார். இதற்குமேல் பொலீஸால் என்ன செய்ய முடியும்? கடவுளைப் பற்றி கடவுளிடமே கம்பிளெயின்ட் கொடுக்க முடியாது என்பதால், கோவிலுக்கு போகாமல், ராம்நகர் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
நீதிமன்றமும், தம்மை ஒரு சக்திவாய்ந்த அமைப்பாக கருதி, நித்தியானந்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஜூலை 30-ந் தேதியன்று பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் ஆண்மை சோதனை, குரல் சோதனை செய்வதற்காக நித்தியானந்தா வந்து சேர வேண்டும் என்பதே நோட்டீஸ்.
அந்த நோட்டீஸூக்கும் பெப்பே காட்டிவிட்டார் சுவாமிகள்.
ஆண்மை பரிசோதனை மேற்கொள்வதற்கு கால அவகாசம் தேவை என்று ஒரு மனுவை அனுப்பி வைத்துவிட்டு, ரஞ்சிதா அம்மையார் சகிதம் கைலாய யாத்திரை கிளம்பியிருந்தார் நித்தி. வடக்கே பாஸ்போர்ட் திருவிளையாடல்களை செய்து முடித்துவிட்டு, தமிழகம் திரும்பியுள்ளார் அவர். இதற்கிடையே கர்நாடகா நீதித்துறை சுவாமிகளை விடுவதாக இல்லை. நித்தியின் மனு மீது உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகந்நாதன் முன்னிலையில் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.
"சுவாமிகளின் ஆண்மை பரிசோதனைக்கு அவகாசம் கொடுக்க விரும்புகிறீர்களா?" என அரசுத் தரப்பை கேட்டார் நீதிபதி. இல்லை என்று பதில் வந்தது.
அதையடுத்து, அரசுத் தரப்பில் இருந்து ஆட்சேபனை மனு ஒன்றை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு அரசுத் தரப்பில் இருநாட்கள் அவகாசம் கோரப்பட்டது. நாளை வெள்ளிக்கிழமைக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நித்தி சுவாமிகளுக்கு ஆண்மை சோதனைக்கு கால அவகாசம் கிடைக்குமா, இல்லையா என்பது நாளை தெரிந்து விடலாம். அவகாசம் கொடுக்கப்படா விட்டால், சுவாமிகள் மலையேறிவிடுவார்!
0 comments :
Post a Comment