கடல் வளத்தை சுரண்டுவதை தடுக்க இலங்கை மற்றும் சீசெல்ஸ்க்கு இடையில் இணக்கம்.
இந்து சமுத்திர கடல் மற்றும் கடல் வளங்களை பாதுகாப்பது தொடர்பாக இலங்கை மற்றும் சீசெல்ஸ் நாட்டுக்கு இடையில் இணக்கம் காணப்பட்டு ள்ளதுடன், ஏனைய நாடுகள் கடல் வளத்தை சுரண்டுவதை தடுப்பதற்கும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள சீசெல்ஸ் மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஜேம்ஸ் எலிக்ஸ் மிச்சல், மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இவவாறு இணக்கம் காணபபட்டது.
ஜனாதிபதியின் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்து சமுத்திர பிராந்தியத்தை சேர்ந்த ஏனைய நாடுகளுடன் நட்புறவை கடடியெழுப்புவதன் ஊடாக இந்து சமுத்திர கடல் வளம் தொடர்பான அனுபவங்கள் மற்றும் அது தொடர்பான அறிவினை கட்டியெழுப்ப முடியுமென இச்சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையும் சீசெல்ஸூம் பொது நல வாய அமைப்பில் அங்கம் வகிப்பதனால் இந்து சமுத்திர பிராந்திய நாடு என்றவகையில் நீண்ட காலமாக நட்புறவுடன் செயல்பட்டுள்ளனர். இந்த நட்புறவை தொடர்ந்தும் பேணுவதற்கு இரு நாடுகளின் தலைவர்களும் உறுதி பூண்டனர். விமானம் மற்றும் கடற்படை துறைகளை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது.
கடற் கொள்ளைக்காரர்களால் மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்களுக்கு தீர்வாக இரு நாடுகளுக்கும் இடையில் கடல் பாதுகாப்பு செயல்த்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டடுள்ளது. அரச தலைவர்களுக்கு இடையில் 2 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதுடன் மேலும் 2 ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment