Thursday, August 16, 2012

சம்பந்தனுக்கு சவால் விடுக்கின்றார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.

தமிழ் நாட்டில் சென்னையில் டெசோ எனும் ஈழ ஆதரவு மாநாடு ஆரம்பமானபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய ஆதரவு இயக்கம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உத்தியோகபூர்வ இல்லதத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டது. தேசாபிமான பிக்குகள் அமைப்பு, தேசாபிமான தேசிய அமைப்பு, மானெல் மல் அமைப்பு உட்பட பல அமைப்புக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டன. இதில் சிங்களத்திலும் தமிழிளும் கருத்துக்களை வெளிப்படுத்திய திருகோணமலை மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த வீரசேகர 13 திருத்தச் சட்டத்தினூடாக நாட்டை பிளவு படுத்துவதை விடுத்து முடிந்தால் சம்பந்தனை நாட்டு மக்களை இணைத்துக்காட்டுமாறு அறைகூவல் விடுத்துள்ளார்.

தொடர்ந்து அங்கு பேசிய அவர் இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாக உருவாக்கப்பட்டிருந்த தற்காலிக ஈழம் இராட்சியத்தின் தலைநகராகவிருந்த திருகோணமலையிலேயே தானும் பிறந்தவன் என்றும் அதே பிரதேசத்தை சேர்ந்த சம்பந்தனிடம் அறைகூவலை தான் விடுப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் எனது அன்புக்குரிய அம்மா அப்பா மற்றும் சகோதர சகோதரிகளுக்கு கூறுகிறேன். உங்களுக்கு நினைவிருக்கும் அன்று 1988இல் மாகாணசபைத் தேர்தலில் அனைத்து அதிகாரத்தையும் வழங்கி, வரதாராஜபெருமாள் ஆட்சிக்கு வந்து என்ன செய்தார்? ----- புதிய இராணுவத்தை அமைத்தார்.  புதிய கொடியை ஈழம் கொடியை உருவாக்கினார். இந்தியாவிலிருந்து ஆயுதங்களை கொண்டுவந்தார். ஈழம் இராச்சியத்தை உருவாக்குவதற்கான செயற்;பாடுகளை முன்னெடுத்தார். 1988 இல் திருகோணமலை மக்கள் அனுவித்த விடயங்களை நாங்கள் பாடசாலைக்கு சென்ற காலப்பகுதியில் கண்டோம். ஆனால் இன்று சம்பந்தன் கேட்பதும் அதனைத்தான். சம்பந்தன் திருகோணமலையைச் சேர்ந்தவர். நானும் திருகோணமலையைச் சேர்ந்தவன். நான் சம்பந்தனிடம் கூறுகிறேன் முடிந்தால் இனங்களுக்கிடையில் இணைவையேற்படுத்திக்காட்டமாறு. அச்செயற்திட்டத்திற்கு நாம் தயாராக இருக்கின்றோம். மாறாக இந்நாட்டை கூறுபோடுவதற்கு அல்ல.

இங்கு சம்பந்தன் கருணாநிதி ஆகியோரின் கொடும்பாவி எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.



1 comments :

Arya ,  August 17, 2012 at 3:44 AM  

என்.கே.கே.பி ராஜா பேசியதாக ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில்

ராஜீவ் காந்தியைக் கொடூரமாகக் கொன்றார்கள் விடுதலைப் புலிகள். இளம் தலைவர் ராஜீவ் காந்தியை நாம் இழந்தோம். பல குழுக்களாக இருந்த போராளி அமைப்புகளை ஒன்றாக இருக்கச் சொன்னார் கலைஞர். ஆனால், பிரபாகரன் அதைக் கேட்கவில்லை.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது ஆட்சியை மட்டும் நாம் இழக்கவில்லை. ஈழத்துக்காகப் போராடிய மற்ற அமைப்புகளின் தலைவர்களை பிரபாகரன் கொன்றார். ஈழத்தை, தான் மட்டும் ஆள வேண்டும் என்ற சுயநலம் பிரபாகரனுக்கு.

பழ.நெடுமாறன் எதற்கெடுத்தாலும் ஒரு கொடியைப் பிடித்துக்கொண்டு ஈழத்துக்குப் போவேன் என்று கூறுவார். ஆனால் போக மாட்டார். தைரியம் இருந்தால் ஈழத்துக்குப் போய் பிரபாகரனோடு சேர்ந்து போராட வேண்டியதுதானே?

வைகோ, திருட்டு தோணி ஏறிப் போனார். ராஜபக்சவைவிட அதிக தமிழர்களைக் கொன்றவர் பிரபாகரன். ராஜபக்ச, பிரபாகரனைக் கொன்றது கரெக்ட்'' என்று முடித்தார் என்.கே.கே.பி ராஜா.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com