பட்டதாரிகளை திசை திருப்ப முயலும் ஐ.தே.கட்சியின் போலிப் பிரசாரம் - செனவிரட்ன
அரசியல் கட்சி பேதமின்றி, பட்டதாரி களுக்கு அரச துறையில் தொழில் வாய்ப்புகளை வழங்க, தற்போதைய அரசாங்கத்திற்கு முடிந்தது எனவும், பயிலுனர்களாக சேர்த்துக்கொள்ளப் பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் டி.ஜே. செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
சேர்த்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனங்கள், அரசியல் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே, மேற்கொள்ளப்படுமென, ஐக்கிய தேசியக் கட்சியினர், போலி பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர் எனவும் ,நாம் எக்காரணம் கொண்டும் அரசியல் பேதங்களை கருதி, நியமனங்களை வழங்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
பட்டதாரிகளை புத்திசாலிகள் என்ற வகையிலேயே, நாம் கருதுகின்றோம். இவர்களுக்கு வழங்க வேண்டிய இடத்தினை வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். அரசியல் பேதங்களின்றி, நிரந்தர நியமனம் வழங்கப்படும் என இரத்தினபுரி மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பட்டதாரிகள் சம்மேளனத்தில் கலந்;து கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான பட்டதாரிகள், இதில் கலந்து கொண்டனர். இலங்கை சுதந்திரப் பட்டதாரிகள் சங்கத்தின் சிரேஷ்ட உப தலைவரும், அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டியவும், இங்கு உரையாற்றினார். அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்டோரும், இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment