Thursday, August 30, 2012

மேலும் உறுதியடைந்தது சீனா - இலங்கைக்கும் உறவு.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியேன் குவேங்லி ஆகியோருக் கிடையிலான சந்திப்பொன்று அலரி மாளிகையில் நேற்று இடம் பெற்றுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈரானில் நடைபெறும் அணிசேரா இயக்க மாநாட்டில் பங்கேற்பதற்காக ஈரானுக்கு செல்வதற்கு முன்னர், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கை- சீன நட்புறவு மேலும் மேம்படுவதற்கு, இந்த சந்திப்பு உந்துசக்தியாக அமையுமென, ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன் இலங்கை தொடர்பில், சீனா செலுத்தி வரும் ஆர்வம் மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாகவும், இலங்கை மக்கள் சார்பில் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும், ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் சவால்களின்போது, சீனா தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளது எனவும் இதற்காகவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீன பாதுகாப்பு அமைச்சரிடம் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

இலங்கையுடன் தொடர்ந்தும் நட்புறவை பேணுவதற்காக அனைத்து உதவிகளையும், வழங்குவதாக, இச்சந்திப்பின்போது, சீன பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார் ஜெனரல் லியேங் குவேங்லீ, சீன பாதுகாப்பு அமைச்சராக இலங்கைக்கு வருகை தந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். பேச்சுவார்த்தையை அடுத்து, ஜனாதிபதி, சீன பிரதிநிதிகளுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும், இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment