சம்பந்தனும் கருணாநிதியும் இரத்த வெறி பிடித்தவர்கள்- குணதாஸ அமரசேகர
இலங்கையின் உள்வீட்டு விவகாரங்களில் இந்தியா அநாகரிகமான முறையில் தலையிட்டு உள்நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது எனவும், கருணாநிதி இலங்கையில் தமிழீழத்தை அமைக்கப் போவதாகக் பகல் கனவு காண்கின்றார் எனவும், அவர் காணும் பகல் கனவின் ஒரு கட்டமே டெசோ மாநாடாடு என்பதை தமிழகமும், மத்திய அரசும் புரிந்து கொள்ள வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனும், முன்னால் தமிழக முதல்வர் கருணாநிதியும் இரத்த வெறி பிடித்தவர்கள். இவர்களுக்கு தமிழீழம் வேண்டுமென்றால் இந்தியாவில் அமைத்துக் கொள்ளட்டும். இலங்கையில் அதற்கான அனுமதியை ஒருபோதும் வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் உதவியுடனே டெசோ மாநாட்டை கருணாநிதி நடத்துகின்றார் எனவும், பிரதமர் மன்மோகன்சிங் ஒன்றுமே தெரியாது போன்று நடிக்கின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மீண்டும் இலங்கையில் இரத்த ஆறு ஓடுவதற்கு இந்தியா செயற்படக் கூடாது எனவும், உள்நாட்டு விடயங்களை இலங்கை அரசு பார்த்துக் கொள்ளும் எனவும், இந்தியா அந் நடவடிக்கையில் தலையிட வேண்டிய அவசியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்தச் சட்டத்தை அரசியலமைப்பிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்மெனவும், இலங்கை அரசியலமைப்புக்குள் பலவந்தமான திணிக்க முயலும் இந்தியாவின் பிரிவினைவாத கொள்கைகளை நீக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment