Sunday, August 5, 2012

நான்கு அரசியல்வாதிகள் பொலிஸாரினால் கைது

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நான்கு அரசியல்வாதிகள் பொலிஸா ரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தென் மாகாணசபை உறுப்பினர் கிரிஷாந்த புஸ்பகுமார, மற்றும் போப்பே பொத்தல பிரதேச சபை உறுப்பினர் அமில நுவன் ஆகியோர், பொலிஸாரை தனது கடமையை செய்யவிடாது இடையூறு செய்ததன் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தலகம்பொல பகுதியில் நேற்று நடைபெற்ற திருமண வைபவமொன்றினால் வீதியில் ஏற்பட்ட வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, அதற்கு சந்தேகநபர்களால் இடையூறு விளைவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், வைத்தியர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் மத்திய மாகாண சுகாதார அமைச்சர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மருத்துவரைத் தாக்கியதற்காக அமைச்சரைக் கைது செய்யக் கோரி மத்திய மாகாண மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அமைச்சர் சுனில் அமரதுங்க, சரணடைவதற்காக கண்டி பொலிஸ் நிலையத்திற்கு வந்தபோது அவரை கைது செய்யததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், பதுளை தேசிய நீர் வழங்கல் பிரதேச வடிகாலமைப்பு சபையின் பணியாளர் ஒருவரை கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பில் பதுளை பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை, வினித்தகம பகுதியில் முன்னெடுக்கப்படும் குடிநீர் திட்டத்தை கண்காணிப்பதற்காக சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தில் காயமடைந்த பணியாளர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment