பாராளுமன்ற ஆசனத்தினை தக்கவைத்துக் கொள்வ தற்காக இன்று சிங்களப் பேரினவாதம் பற்றி முழக்கமிடும் சுரேஸ் பிரேமச்சந்திரன் அன்று பாராளுமன்றப் பதவிகள் எதனையும் பெற்றுக்- கொள்ளலாமென்னும் கற்பனையில் அன்றைய ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரணதுங்க அவர்களின் தீவிர ஆதரவாளனாக செயற்ப்பட்ட சுரேஸ் பிரேமச்சந்திரனின் கதையை மகாவலி மீண்டுமொருமுறை பதிவு செய்துள்ளது. சுரேஸ் பிறேமச்சந்திரன் ஒட்டுக்குழுவாகவிருந்து தேசியவாதியாக மாறிய கதையை அது இவ்வாறு கூறுகின்றது.
துரோகிகள். அடிவருடிகள் போன்ற வார்த்தைகளை கையாள்வதில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நிகராக வேறு எந்த கட்சியுமே கிடையாது.தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்கள். அரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றவர்கள் போன்றவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பார்வையில் துரோகிகள். அடிவருடிகள் என்று முத்திரை குத்தப்பட்டு வந்திருக்கின்றார்கள்.
ஆனால் அரசியலில் நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை என்பது போலதான் கூட்டமைப்பின் இந்நிலைப்பாடும் இருந்து வருகின்றது. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினராக ஒரு காலத்தில் இருந்தவர் சங்கர். அப்போது தமிழ் கூட்டமைப்பு இவரை துரோகியாக சித்திரித்தது. ஆனால் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து சங்கர் விலகினார். இந்நிலையில் எதிர்வரும் கிழக்கு மாகாண தேர்தலில் வேட்பாளர்களில் ஒருவராக கூட்டமைப்பால் இவர் நிறுத்தப்பட்டு உள்ளார்.
இதே போலதான் ஈ.பி.ஆர். எல்.எப் துரைரட்ணம் முன்பு தமிழ் கூட்டமைப்பால் தீண்டத் தகாத ஒருவராக பிரகடனப்படுத்தப்பட்டவர். இவரும் இதே தேர்தலில் கூட்டமைப்பால் வேட்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.ஆனால் இவற்றில் மிக பெரிய வேடிக்கை என்னவென்றால் கூட்டமைப்பில் துரோகிகளுக்கும். அடிவருடிகளுக்கும் இடம் கிடையாது என்று தேர்தல் பிரசார கூட்டங்களில் பகிரங்கமாகவே முழக்கம் இட்டு வருகின்றார் துரை.
இன்னொரு விடயம். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் முதலாவது ஜனாதிபதி பதவிக் காலத்தின்போது சந்திரிகாவின் ஆலோசகராக செயல்பட்டவர் சுரேஸ் பிறேமச்சந்திரன். பிறேமச்சந்திரனின் சகோதரர் மனோகரனும் அக்காலப் பகுதியில் சந்திரிகாவின் முக்கிய ஆலோசகராக செயல்பட்டவர்.சந்திரிகாவின் அமைச்சரவையின் அன்று மீன்பிடி அமைச்சராக இருந்தவர் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ. அப்போது மீன்பிடி அமைச்சின் ஆலோசகராக செயல்பட்டவர் இதே சுரேஸ்.
சந்திரிகாவின் ஆலோசகராக இருந்தமை மூலம் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்கிற அடிப்படையில் கூட்டமைப்பின் பார்வையில் மிக பெரிய துரோகியாக பிரகடனப்படுத்தப்பட வேண்டியவர் சாட்சாத் சுரேஸ் பிறேமச்சந்திரன்தான் என்பதில் சந்தேகமே கிடையாது. ஆனால் அதனை நிறைவேற்றுவதற்கு தகுதியானவர்கள் எவருமே கூட்டமைப்பில் கிடையாது என்பதே யதார்த்தமாகும்.
No comments:
Post a Comment