அரசாங்கத்தின் ஓர் அங்கமாக இருந்து கொண்டு, கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மேடைகளில் அரசுக்கு எதிரான துவேசக் கருத்துகளை அமைச்சர் ரவூப் ஹக்கிம் கூறிவருகின்றார். இது கூட்டுப் பொறுப்பை மீறும் செயலாகும் எனவும், இது தொடர்பாக விசாரணை செய்யப்படும் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளரான அமைச்சர் கெகலிய ரம்புக்வெல ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்துள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதியாகவே கணிக்கப்படுவார். எனவே விசாரணை மேற்கொண்டு உண்மையை கண்டறிய வேண்டும் என்றும் அவர் கூறினார். சபரகமுவை மற்றும் வட மத்திய மாகாணங்களில் அரசுடன் சேர்ந்து போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகணத்தில் தனித்து போட்டியிடுகின்றது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
உத்தேச ரங்கிரி தம்புள்ளை புனிதபூமி திட்ட வேலைகளை விரைவில் முடிக்குமாறும், இஸட் புள்ளி தொடர்பில் மாணவர்கள் பாதிக்கப்படாதவாறு பாதுகாக்க வேண்டும் என்றும், உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கட்டளை பிறப்பித்திருப்பதாகவும், அமைச்சர் ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment