அமெரிக்க ராணுவ தாக்குதலில் தாலிபான் தலைவர் பலி!
ஆப்கானில் நடத்தப்பட்ட விமான ப்படை தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த முக்கிய தாலிபான் தலைவர் அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்டார். இதுகுறித்து அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில்:
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள குனார் மாகாணத்தில் போர் விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது இதில் அங்கு பதுங்கியிருந்த பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளின் தலைவர் முல்லா ததுல்லா கொல்லப்பட்டான்
ததுல்லா முன்னாள் தாலிபன் தலைவர் மல்வி பக்கூரின் இழப்பிற்கு பிறகு தாலிபானின் தலைவராக செயல்பட்டு வந்ததாகவும் மேலும் இந்த தீவிரவாத அமைப்பு ஆப்கான் மற்றும் பாக்கிஸ்தான் ராணுவத்திற்க்கும் பெரிய அச்சுறுத்த்லாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
குறித்த தாக்குதலில் 12 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் முல்லா ததுல்லா வின் இரண்டாம் நிலைத் தளபதியும் கொல்லப்பட்டுள்ளதாக பாக்கிஸ்தான் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment