Friday, August 10, 2012

ஈழம் இருக்கட்டும், வீசாவாவது பெற்றுக் கொடுப்பாரா கருணாநிதி

எல்.ரி.ரி.ஈ ஆதரவாளர்களின் ஏற்பாட்டில் வரும் 12ம் திகதி தமிழ் நாட்டில் நடைபெறவிருக்கும் டெசொ மாநாட்டுக்கு இலங்கையில் புலி ஆதரவாரான நவ சமசமாஜ கட்சித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்னாவுக்கு வருகை தரும்படி டொசோ விழாக் குழுவினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

அதற்கு தான் அங்கு செல்வதாகவும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றிப் பேசப் போவதாகவும் கருணாரட்ன தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு இந்தியாவுக்குச் செல்வதற்கான விசா வழங்குவதற்கு இந்தியா மறுத்துள்ளது.

தற்போதைய இந்திய அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான தி.மு.க. வின் தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் தலைமையில் இம்மகாநாடு நடைபெற ஏற்பாடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களுக்கு ஈழம் பெற்றுக் கொடுப்பதற்கு முன்னர், ஆகக் குறைந்தது கலாநிதி கருணாரட்னாவுக்கு இந்தியா வருவதற்கு விசாவாவது பெற்றுக் கொடுப்பாரா என்று பார்ப்போம்.

No comments:

Post a Comment