சிங்களவர் மூளைச்சலவை செய்யப்படுவதுடன் மற்ற இனத்தினர் பதிக்கப்படுகிறார்களாம். சந்திரிகா
பால்சோறு சாப்பிட்டுவிட்டு மகிழ்சியோடு இருக்கும் செயல் அல்ல யுத்த வெற்றியென்பது. யுத்தத்துக்கான காரணங்களுக்குத் தீர்வு காணும்போதுதான் யுத்தம் முடியும் என்று கூறினார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. வெளிநாட்டு மத்தியஸ்தத்தின் ஊடாகவே நீதியை நிலை நாட்ட முடியும் என்று அவர் கூறுகிறார். அதிகாரப் பங்கீடு செய்வதே அதற்கு ஒரே தீர்வு. எனது காலத்தில் ஊழல் மோசடிகளுக்கு இடம் இல்லை. 2005 ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் வேட்பாளர் தெரிவுக் குழுவில் 59 க்கு 56 பேர் மகிந்தவை வேட்பாளராக நிறுத்துவதை எதிர்த்தனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க முடியாது போனமைக்கு வருந்துகிறேன். மீண்டும் செயல்பாட்டு அரசியலுக்கு வர நான் விரும்பவில்லை என்று வெளிநாட்டு இணையத்தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டில் தனது பலவிதமான ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் சந்திரிகா.
ஸ்ரீலசுக பண்டாரநாயக்காகளின் கட்சி. இன்று எனது ஆலோசகர் பதவி கூட அதில் செல்லாக்காசு. ராஜபக்ஷாக்கள் ஸ்ரீலசுகவை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். யுத்தம் முடிந்த பிறகு பால்சோறு சாப்பிட்டார்கள். ஆனால், நாங்கள் வேறுவிதமாகச் சிந்தித்தோம். போரில் நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், ஆயிரக்கணக்கான படைவீரர்கள் மடிந்தார்கள். அதற்காக நீங்கள் பால்சோறு சாப்பிட்டு சந்தோசம் கொள்ள முடியாது. யுத்தம் முடிந்து விட்டது என்பது பிரச்சினைக்கு சம்பூர்ணமான தீர்வு வழங்கப்பட்டு விட்டது என்று அர்த்தம் அல்ல. அதனால் ஏற்பட்டது தமிழ் மக்களின் பிரச்சினையின் வெளித்தோற்றம் தோற்கடிக்கப்பட்டு விட்டது என்பது மாத்திரமே. பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு விட்டாலும் தமிழ் மக்களுக்கு வரலாறு முழுதும் இருந்து வரும் உண்மையான பிச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை. உதாரணத்துக்கு சொல்வதானால், தடிமன் பிடித்த ஒருவரிடம் கைலேஞ்சியைக் (கைக்குட்டை) கொடுத்து சளியைத் துடைத்துக் கொள்ளச் சொல்வதாலோ அல்லது இன்ஹேலரைக் கொடுத்து உறிஞ்சச் செய்வதாலோ தடிமன் நின்று விடாது. தடிமனுக்கு அடிபடையான வைரஸ் அல்லது பக்டீரியாவை எதிர்க்கும் மருந்து கொடுத்து அழிக்க வேண்டும்.
எனவே, 13 வது திருத்தச் சட்டத்தில் கூறப்படும் அதிகாரப் பங்கீடு செய்யப்பட வேண்டும். அதிகாரம் பகிரப்படுவதுதான் இந்த பிரச்சினைனக்கு ஒரேவழி. எனது பதவிக் காலத்தில் இதற்கு முயற்சித்தேன். இன்றைய அரசுக்கு அதிகாரப் பங்கீடுசெய்யும் எண்ணம் சிறிதும் கிடையாது. அவர்கள் வழிமாறுகிறார்கள். வெளிநாடுகளின் மத்தியஸ்தம் மூலமாகவே ஏதேனம் அல்லது எதிர்பார்க்கப்படுவதைச் சாதிக்க முடியும்.
மேலும் கருத்து தெரிவித்த சந்திரிகா அம்மையார் தனது காலத்தில் ஊழல் மோசடி இடம் பெறவில்லை. மனிதவுரிமைகள் மீறப்படுவது மிக அரிதாக இருந்தது. ஆனால், இன்றைய அரசோ அரச ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தி சிங்கள மக்களை மிக மோசமாக மூளைச்சலவை செய்துள்ளது. அவர்களைக் கொண்டு சிங்களவர் அல்லாத மக்களுக்குப் பாதிபை ஏற்படுத்துகின்றது என்றார்.
0 comments :
Post a Comment