இலங்கை படையினருக்கான பயிற்சி தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 85 பேர் கைது
இலங்கை பாதுகாப்பு படையினருக்கு இந்தியாவில் பயிற்சி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 85 பேர் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தியாவின் குன்னூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் மா.தி.மு.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஆதரவாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய பாதுகாப்பு சேவை பல்கலைக்கழத்தினால் இலங்கை பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்படும் பயிற்சியை நிறுத்த கோரியே இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றதுள்ளது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் குன்னூரில் ரயில் நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டதாகவும், இதனால் மேட்டு பாலம் ரயில் போக்குவரத்து தடைப்பட்டதாகவு,ம் இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக குறித்த பல்கலைக்கழகத்திற்கான பிரவேச பாதையும் தடைப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு சுமுக நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment