சட்டவிரோதமாக காணிகளை கைப்பற்றிய 6 குழுவினரை சி.ஐ.டி கைது செய்துள்ளது.
சட்டமுரணான காணிக் கைப்பற்றல், வீடுகளில் பலவந்தமாகக் குடியிருத்தல், மோசடியான உறுதிகள் தொடர்பான 3500 க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு கிடைத்திருப்பதாக அதன் சிரேட்ட அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார்.
இவற்றில் பெரும்பாலானவை கொழும்பில் இருந்து கிடைக்கப்பெற்றவையென்றும், ஏற்கனவே கொழும்பில் இயங்கும் ஆறு கோஷ்டியினர் பிடிக்கப்பட்டுள்ளதாகவும், கிடைத்த முறைப்பாடுகளில் 1165 புலனாய்வு செய்யப்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பாடுகளில் ஒரு இராணுவ அதிகாரியின் காணியில் குடியிருந்தது, 60 ஏக்கர் தென்னங் காணியை சட்டமுரணாக விற்றது, மற்றும் 2 வாரத்துக்குள் ஒரே காணியை 8 பேருக்கு விற்றது போன்றவைகளும் அடங்கி இருக்கின்ற எனவும், அவற்றில் 220 காணிகளின் விசாரணையை முடித்து உரிமையாளரிடம் அவற்றை ஒப்படைத்திருப்பதக சி.ஐ.டியினர் தெரிவித்துள்ளனர்.
காணி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கட்ட சந்தேக நபர்கள் சிலர் அங்கிருந்தவாறே தமது மோசடி வேலையைத் தொடர்ந்து செய்து வருவதாக அறியமுடிவதாகவும், காணிப் பதிவுத் திணைக்களத்தில் இருந்து காணிப் பதிவேடுகள் சட்டமுரணாக அகற்றப்படுவதாகவும், இவ்வாறான சட்டவிரோத வேலைகளில் ஈடுபட்ட கொழும்பு காணிப் பதிவுத் திணைக்களத்தில் வேலை செய்யும் சிற்றூழியர் ஒருவர் கார்வைத்திருப்பதாகவும், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக காணி மற்றும் வீடுகளைக் கைப்பற்றியிருத்தல், அத்துடன் அவை தொடர் மோசடிகள் சம்பந்தமாக தமக்கு அறிவிக்குமாறு கடந்த ஜனவரியில் சி.ஐ.டி பொது மக்களைக் கேட்டிருந்தது. பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் இந்த மேசடிகளை கன்டுபிடிப்பதற்காக ஒரு அலகை அமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment