Thursday, August 23, 2012

தொண்டர் ஆசிரியர்களின் மாதாந்தச் சம்பளத்தை 6000 ரூபாவாக அதிகரிக்க அங்கீகாரம்

கல்வி அமைச்சின் கீழ் பணிபுரியும் தொண்டர் ஆசிரியர்களின் மாதாந்தச் சம்பளத்தை 6000 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி யுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலளார் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு அமைச்சர் மேலும் தகவல் தெரிவிக்கையில் நாடு முழுவதிலும் உள்ள அரசாங்க பாடசலைகளில் தற்போது 47 ஆயிரம் தொண்டர் ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். இவர்களுக்கு மாதாந்த சம்பளமாக மூவாயிரம் ரூபா வழங்கப்படுகின்றது.

இவர்கள் தமது தற்காலிக நியமனத்தை நிரந்தரமாக்கிக் கொள்வதற்காக ஆசிரியர் பயிற்சி நற்சாட்சிப் பத்திரம் அல்லது பட்டதாரிச் சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே இவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வகை செய்யும் வகையில் அவர்களின் மாதாந்தச் சம்பளத்தை 3000 ரூபாவிலிருந்து 6000 ரூபாவாக அதிகரிக்கவேண்டுமென கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment