லங்சகே பிரியந்த மெண்டிஸ் பற்றிய தகவல்களை வழங்குவோருக்கு 5 இலட்சம் ரூபா சன்மானம்.
கொழும்பு தேசிய அரும்பொருளகத்தில் மிகவும் பெறுமதி வாய்ந்த பொருட்களைக் கொள்ளையடித்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட லங்சகே பிரியந்த மெண்டிஸ் பற்றி சரியான தகவல்களை வழங்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மையம் பொது மக்களைக் கேட்டுள்ளது.
அதன்படி சரியான தகவல்களை கீழ்க் குறிப்பிட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஸ்மன் ஹலுகல்லை வேண்டுகோள் விடுத்துள்ளார்:-
மேற்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் – 0112 441147, 0777 755950
பணிப்பாளர், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு – 0112 662323, 0717 774400
பொறுப்பதிகாரி, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு – 011 2662311, 0714 060906
கொழும்பு குற்றப் பிரிவு – 0112 685151
இந்தநபர் தொடர்பான சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு 5 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment